கல்வியின் நோக்கத்தை எடுத்துரைக்கும் நுால்.
தனிமனிதரின் ஆளுமையை சிறப்பாக வளர்த்து, நல்லொழுக்கமுடன், நற்பண்புகளை கடைபிடிக்க வைத்து, வெற்றி இலக்கை அடைய உறுதி செய்வதே சிறந்த கல்வி முறை என வரையறுக்கிறது. இக்கட்டான வேளையிலும் சரியான முடிவு எடுத்து சமூகத்துடன் இணக்கமாக வாழ, பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றுவதே கல்வியின் இலக்கு என்கிறது.
அறிவை சரியாக பயன்படுத்த மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறது. தமிழகம் வகுத்துள்ள பாடதிட்டத்தை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்வு தத்துவம், தனிமனித பண்பு, குடும்ப நலம், மனவளம், உடல் நலம் பேணல் என பல பிரிவுகளில் மாணவர்களுக்கு அறிவூட்டும் கருத்துகளை உடைய நுால்.
– சிவா