பன்முக சிந்தனையின் ஊற்றுக்கண்ணாக வண்ணமயமாக ஒளிர்கிறது விகடன் தீபாவளி மலர். வண்ணங்களால் நிரம்பிய தெய்வத்திரு ஓவியங்கள் கண்ணையும், கருத்தையும் கவர்ந்து ஆன்மிக சிந்தனையை ஊட்டுகின்றன. இமயமலையில் அமர்நாத் புனித யாத்திரை குறித்த கட்டுரை உருக வைக்கிறது. ஸ்ரீரங்கப்பட்டணம் சிறப்புகளை கூறி நேரில் தரிசிக்கும் ஆர்வத்தை துாண்டுகிறது. திரைப்பட பிரபலங்களின் பேட்டிகள், பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளுடன் கலகலப்பூட்டுகிறது.
காட்டுயிரின புகைப்பட கலை துடிப்பை தருகிறது. வாசனை திரவியம் தயாரிப்பு குறித்த விபரம் மணம் வீசுகிறது. அன்றாடம் நாயை நடை பயிற்சிக்கு அழைத்து செல்லாவிட்டால் அபராதம் விதிக்கும் நாடு, சைக்கிள் அதிகமுள்ள நாடு என வியப்பூட்டும் தகவல்கள் நிறைந்துள்ளன. சிறுவர்களையும் மகிழ்விக்கும் வகையில் வண்ண கோமாளிகளை காட்டி வசீகரிக்கிறது விகடன் தீபாவளி மலர்.
– ஒளி