சமூகத்தை மேம்படுத்தும் கருத்துகளால் படைக்கப்பட்ட காவிய நுால். பெண்ணிய நோக்கில் மரபுப் பாடல்களாக அமைந்துள்ளன.
வாள்விழி என்ற கதாநாயகியை சுற்றி, முற்றிலும் மகளிர் கதை மாந்தர்களை கொண்டு படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கதை மாந்தர் பெயர்கள் அனைத்தும் தனித்தமிழிலே உள்ளன. தற்காலப் பெண்ணிய சிந்தனைகளை உள்வைத்து மன உறுதியும், ஆளுமையும் உடைய புதுமைப் பெண்ணாக சித்தரிக்கிறது.
ஜாதி, சமய பேதமற்ற சமத்துவ கோட்பாட்டை உள்ளடக்கிய கருத்தோட்டங்கள் கவர்கின்றன. மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்து பரிமாற்றங்கள் உள்ளன. ஏற்றத்தாழ்வுகளை களையும் வகையில் முனைப்புடன் உள்ளது. பெண்ணுரிமையின் முக்கியத்துவத்தை பறைசாற்றி நம்பிக்கையை விதைக்கும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு