சென்னை வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்ட வரலாற்றை நயத்துடன் எடுத்துரைக்கும் புத்தகம்.
மாமல்லபுரம் சிற்ப கல்லுாரியில் படித்தோருக்கு வேலை வழங்கும் நோக்கத்துடன் தமிழக அரசு இதை உருவாக்கியதாக கூறப்பட்டு உள்ளது. வள்ளுவர் கோட்டத்தின் முழு தோற்றம் மற்றும் தேர் அமைப்பு பற்றி விளக்கப்பட்டுள்ளது.
திருக்குறள் அதிகாரங்களை விளக்கியுள்ள கற்பலகைகள் பற்றிய விபரத்தையும் அழகாகத் தருகிறது. இதை அமைத்த காலத்தில் நிலவிய அரசியல் சூழலை பற்றியும் விவரிக்கிறது.
பிற்சேர்க்கையாக தற்போதைய நிலை, ஒளி, ஒலிக்காட்சி அமைப்பு பற்றி உள்ளது. சிற்பக் கலையின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த நுால்.
– முகிலை ராசபாண்டியன்