திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வ.வே.சு.ஐயர், அதற்கு எழுதிய ஆங்கில முன்னுரையுடன் அதன் தமிழாக்கமும் உடைய நுால்.
படைக்கப்பட்ட காலத்திற்கும், நாட்டிற்கும் மட்டுமே உரியதாக இல்லாமல், ஒட்டுமொத்த மனித குலத்திற்கு, எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடிய கருத்துகள் தந்த ஞான நுால் என வணக்கம் வைத்து வழிபடப்படுகிறது. ஆங்கில மொழிபெயர்ப்புகளை ஒப்பு நோக்கியுள்ளது.
சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களில் வள்ளுவர் கருத்து எடுத்து ஆளப்பட்டு இருப்பதால், திருக்குறள் எழுதப்பட்ட காலத்தின் பழமையை உறுதிப்படுத்துகிறது. பொருட்பால் அரசியல் சார்ந்தது என்கிறது. நுாற்றாண்டை கடந்தும் கல்வெட்டாக நிலைத்திருக்கும் கருத்துள்ள நுால்.
– சீத்தலைச்சாத்தன்