இமயமலை பயண அனுபவத்தை சுவாரசியம் குன்றாமல் தரும் நுால். குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட படைப்பு தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
நடை பயணத்தில் விருப்பமுடைய எழுத்தாளர் காலேல்கர், 1912ல் இமயமலையில் பயணித்த போது கிடைத்த அனுபவம் சார்ந்து உள்ளது. பனி மூடிய மலைப் பகுதிகளில் கண்டவற்றை தொகுத்து ஒரு காவியமாக வடிக்கப்பட்டு உள்ளது.
இமயமலை பகுதி மக்களின் அப்போதைய வாழ்க்கை நடைமுறை சித்திரமாக செதுக்கப்பட்டு உள்ளது. பிரதேச முக்கியத்துவமும், மக்கள் நிலையும் பல கோணங்களில் வடித்து காட்டப்பட்டு உள்ளது. அனுபவ சித்தரிப்பு, இமயமலையை உயிர்ப்புடன் புதிய கோணத்தில் காட்டுகிறது. இந்தியாவின் பன்முக பண்பாட்டை புரிய உதவும் நுால்.
– மதி