ஜாதகம் இல்லாமல் எளிய முறையில் பலன்களை அறிய உதவும் நுால். பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான சகாதேவனால் அருளப்பட்டது.
குழந்தை பிறந்த நேரம் அடிப்படையில் ஜாதகம் எழுதப்படுகிறது. நேரத்தில் வித்தியாசம் இருந்தால், பலன்கள் மாறிப்போகும். அதை தவிர்க்கும் குறி சாஸ்திரம் பற்றிய விபரம் உள்ளது. குறிப்பிட்ட 108 எண்ணுக்குள் ஒன்றை கேட்டு பலன் சொல்வதே இதன் அடிப்படை.
இதன்படி, சூதாட்டத்தில் ஆடுவது போல் உருட்டிப் போட்டு வரும் எண்ணை எழுதிக்கொள்ள வேண்டும். மூன்று முறை இது போல் உருட்டியதில் கிடைக்கும் எண்ணுக்கு ஏற்ப பலன் சொல்லப்படுகிறது. ஜோதிடர்களுக்கான ஆசார அனுஷ்டானமும் சொல்லப் பட்டுள்ளது. ஜோதிடர்களுக்கு பயன்படும் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்