மதங்களின் போதனைகளை, சாராம்சங்களை சுருக்கமாக சுவைபட விளக்கும் நுால்.
பாரம்பரியமிக்க குடும்ப பின்னணி தகவல்களுடன் துவங்குகிறது.
ஹிந்துக்களுக்கு மட்டுமல்லாது, எல்லாருக்கும் பொக்கிஷமானது பகவத் கீதை என
சிலாகிக்கிறது. ஒட்டகசிவிங்கி குட்டியிடம் கற்க வேண்டிய வாழ்க்கைப் பாடத்தை
அழகாக எடுத்துக் காட்டுகிறது. பலவீனத்தை விட்டு, பலத்தின் மீது கவனம்
செலுத்துவதே வெற்றிக்கு வழிவகுக்கும் என்கிறது.
வாழ்வில் மேன்மை
ஏற்படுத்திய புத்தகங்களை விவரிக்கிறது. வியந்து பார்த்த ஆளுமைகள் விபரமும்
சொல்லப்பட்டுள்ளது. வியாபாரிகள் கற்றுக் கொள்வதில் அதிகமாக நேரம் செலவிட
வேண்டும் என்கிறது. வெற்றியாளரின் அனுபவ மொழியாக அமைந்த நுால்.
– டாக்டர் கார்முகிலோன்