அன்றாட வாழ்வில் பெண்கள் சந்திக்கும் சவால்களை நயமுடன் வடிவமைத்து தந்திருக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
சமுதாயத்தில் நடமாடும் மனிதர்களே கதாபாத்திரங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். சமுதாயத்தில் நிலவும் சிக்கல்களை உரக்கப் பேசுகின்றன. குடியால் குலமே அழிந்ததை சொல்வது நல்ல படைப்பாக உள்ளது. நல்ல படிப்பினை ஊட்டுகிறது.
ஒரு பெண் வாழ்வில், இடர்ப்பாடுகளை துணிவுடன் எதிர்த்து வெற்றி பெறும் வகையில் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என ஆணித்தரமாக சொல்கிறது. கதைகளில் ஒளிரும் மாந்தர்கள் ஒவ்வொரு விதத்தில் வெளிச்சம் பாய்ச்சுவதை காட்டும் நுால்.
– ஊஞ்சல் பிரபு