ராஜபுத்திர மாவீரன் ராணா பிரதாபின் வாழ்க்கையை சித்தரிக்கும் நுால்.
முகலாய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர் ராணா பிரதாப். ராஜபுத்திர மன்னர்கள் அக்பரிடம் பணிந்த போதும், சமரசம் செய்யாமல் எதிர்த்து நின்ற வீர வரலாறாக மலர்ந்துள்ளது. ராணா பிரதாப் இளமைக்காலம் துவங்கி, மன்னராக பொறுப்பேற்ற செயல்பாடுகள் வரை தக்க ஆதாரங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளது.
போரின் விளைவாக குடும்பத்துடன் காடுகளில் சுற்றித் திரிந்தது, உணவுக்கு வழியில்லாமல் தவித்த கலங்க வைக்கும் செய்திகள் புத்தகத்தில் நிறைந்துள்ளது. பிறந்த மண்ணையும், பின்பற்றிய சமயத்தையும் கண்களாக பாவித்து செயல்பட்ட விதம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. உணர்ச்சிப் பெருக்குள்ள உயிரோட்டமான நடையில் அமைந்த நுால்.
– ராம்