பகவான் சாயிபாபாவால் பக்தர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்பாக உள்ளது ஸ்ரீசாயி மார்க்கம் தீபாவளி மலர். பகவான் வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களும் தொகுத்து தரப்பட்டுள்ளன.
‘சாயி ஒரு தெய்வீக புதிர்’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள நெடுங்கட்டுரை, பகவான் வாழ்க்கையை முழுமையாக எடுத்துரைக்கிறது. நீண்ட நாள் சிகரெட் புகைக்கும் பழக்கம் நொடிப் பொழுதில் மறைய உதவிய சம்பவம் உணர்வு மயமாக வரையப்பட்டுள்ளது.
சந்தங்கள் நிறைந்த, ‘தருவாய் நீ அத்தனையும்’ என்ற எளிய கவிதை இசையுடன் பாட ஏற்ற வகையில் அமைந்துள்ளது. பகவான் சாயிபாபா கருணையால் கிடைத்த ஒவ்வொரு அனுபவமும் ஆன்மிக பாடங்களை புகட்டி நம்பிக்கை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பகவானின் தரிசனம், வியப்பூட்டும் செயல்களை கூறி நம்பிக்கை ஊட்டும் வகையில் உள்ளது ஸ்ரீசாயி மார்க்கம் தீபாவளி மலர்.
– சாது