பூமிப் படத்திலிருந்து மறைந்து போன ஒரு நாடும், மொழியும், நாகரிகமும், மனிதர்களும், அவர்களது பழக்க வழக்கங்களும் எத்தகையதாக இருக்கும்? உடைமைகளற்ற ஒரு நாட்டில், மக்களின் வாழ்க்கை எத்தகையதாக இருக்கும்? என்ற சிந்தனையே நாவலுக்கு கருவாயிற்று. பகை இல்லை, போரில்லை, கருவிகள் கூட இல்லை. அங்கே அக உணர்வு மட்டுமே தலைசிறந்து நிற்கிறது.