உயர்கல்வி படிக்க வசதி இல்லாதோர் மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் இணைந்து பலனடையலாம் என விவரிக்கும் நுால்.
நெட்வொர்க்
என்ற வர்த்தகத்தில் வாடிக்கையாளர் கடைகளை தேடி அலைய வேண்டியதில்லை.
வசிக்கும் இடத்தில் இருந்தே தேவையானவற்றை பெற முடியும். இதில் விளம்பர
செலவும் தவிர்க்கப்படுவதால் பலனை நேரடியாக பெற முடியும் என்கிறது.
மல்டி
லெவல் மார்க்கெட்டிங் பயன்படுத்தி வெற்றி பெற்ற நிறுவனங்கள் பற்றியும்
விபரங்கள் உள்ளன. பெரும் தாக்கம் ஏற்படுத்திய அமெரிக்க நிறுவன வெற்றி
ரகசியங்களும் பதிவிடப்பட்டுள்ளன.
தோல்வியை தவிர்க்கும் வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. சுயதொழில் செய்ய விரும்புவோர் முன்னேற்றத்துக்கு உதவும் நுால்.
-– புலவர் சு.மதியழகன்