தினமலர் - சிறுவர் மலரில் வெளிவந்த, இந்தக் கதை புத்தகம் உருப் பெற்றிருக்கிறது. சிறுவர்களுக்கான கதை என்றாலும், இதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள், பெரும்பாலும் பெரியவர்களுக்குத்தான்! ஆவலுடன் சாப்பிடச் செல்பவர்கள், டிரஸ்-கோடு என்ற பெயரில் அவமானப்படுத்தும், ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், வலுக்கட்டாயமாக கிரெடிட் கார்டுகள், அப்பாவிகளிடம் திணித்து, அவர்களை பாடுபடுத்தும் வங்கிகள், போக்குவரத்து விதிகளை மதிக்காமல், பொது ஜனங்களுக்கு துன்பம் விளைவிக்கும், அரசியல்வாதிகளின் வாரிசுகள், இவர்கள் எல்லாம் தேவலோகத்து இரண்டு அண்டரண்டப் பட்சிகள் எப்படிச் சீர்திருத்துகின்றன என்று, சுவாரஸ்யமாக கதையைப் பின்னியிருக்கிறார் ஆசிரியர்.